தமிழ்நாடு

காஞ்சிபுரத்தில் விஷவாயு தாக்கி 3பேர் உயிரிழப்பு‌

webteam

காஞ்சிபுரம் மாவட்டம் போந்தூரில் உணவகத்தின் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி மூவர் உயிரிழந்தனர். 

காஞ்சிபுரம் மாவட்டம் போந்தூரில் உணவகத்தின் கழிவுநீர்தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் முருகன், அஜித் உள்ளிட்ட 4 தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். உணவகத்தின் மேற்பார்வையாளர் ரவி தொழிலாளர்களுடன் இருந்துள்ளார். அப்போது, விஷவாயு தாக்கியதில், முருகன், அஜித் மற்றும் மேற்பார்வையாளர் ரவி ஆகியோர் உயிரிழந்தனர். மேலும், உயிருக்கு ஆபத்தான நிலையில் 2 தொழிலாளர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.