தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் ஒருவர் கொரோனாவுக்கு உயிரிழப்பு

தமிழகத்தில் மேலும் ஒருவர் கொரோனாவுக்கு உயிரிழப்பு

webteam

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 25 ஆம் தேதி 54 வயது நபர் கொரோனாவால் உயிரிழந்தார். இவருக்கு மூச்சுத் திணறல், சர்க்கரை நோய் இருந்து வந்தது. இதனைத்தொடர்ந்து கொரோனாவால் உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து இன்று காலை விழுப்புரம் மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 51 வயது நபர் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் தற்போது கொரோனாவுக்கு மேலும் ஒருவர் தமிழகத்தில் உயிரிழந்துள்ளார் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஏற்கெனவே கொரோனா பாதித்தவரின் மனைவி தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இன்று உயிரிழந்த இருவருக்குமே ஏற்கெனவே மூச்சுத்திணறல் பிரச்னை இருந்து வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.