தமிழ்நாடு

சென்னை மின்சார ரயிலில் கேட்பாரற்று கிடந்த 3 மாத ஆண் குழந்தை..!

சென்னை மின்சார ரயிலில் கேட்பாரற்று கிடந்த 3 மாத ஆண் குழந்தை..!

Rasus

சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில், மின்சார ரயிலில் இருந்த மூன்று மாத ஆண் குழந்தை மீட்கப்பட்டுள்ளது.

சென்னை தாம்பரம் ரயில் நிலையத்திற்கு, கடற்கரையிலிருந்து இருந்த வந்த மின்சார ரயிலின் முதல் வகுப்பு பெட்டியில் 3 மாத ஆண் குழந்தை துணியால் மூடப்பட்ட நிலையில் கேட்பாரற்று கிடந்தது தெரியவந்தது. இதனையடுத்து பொதுமக்கள் ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து குழந்தையை மீட்ட ரயில்வே‌ பாதுகாப்பு படையினர், குழந்தை ந‌ல பாதுகாப்பு மையத்தில் அக்குழந்தையை ஒப்படைத்தனர்.

மீட்கப்பட்ட குழந்தைக்கு உணவளித்த நிலையில், குழந்தை நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறது. குழந்தையை வீசிச் சென்ற நபர் யார் என்பது குறித்தும் ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.