தமிழ்நாடு

ஆட்டோ விபத்தில் 3 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு

ஆட்டோ விபத்தில் 3 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு

Rasus

சென்னை அயனாவரம் நெடுஞ்சாலையில் ஆட்டோவிலிருந்து தவறி விழுந்த 3 மாத ஆண்குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் வேலன். இவர் தனது மனைவி அர்ச்சனா மற்றும் 3 மாத ஆண் குழந்தையுடன் (யோகேஷ் ராஜ்) அயனாவரத்திலிருந்து  கொன்னூர் நோக்கி ஆட்டோவில் சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதாமல் இருக்க ஆட்டோவை திடீரென திருப்பியுள்ளார்.

இதில் ஆட்டோவின் பின்னால் இருந்த மனைவி அர்ச்சனாவும், குழந்தையும் கீழே விழுந்துள்ளனர். அர்ச்சனாவுக்கு லேசான காயம் ஏற்பட்ட நிலையில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. சம்பவம் குறித்த அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.