தமிழ்நாடு

15 மாதங்களுக்கு பின் முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு

15 மாதங்களுக்கு பின் முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு

webteam

முல்லைப் பெரியாறு அணையில் 15 மாதங்களுக்கு பின் வரும் 16 ஆம் தேதி மீண்டும் ஆய்வு நடக்கவுள்ளது.

முல்லைப் பெரியாறு அணையில் வரும் 16 ஆம் தேதி  புதிதாக நியமிக்கப்பட்ட கண்காணிப்பு குழு ஆய்வு மேற்கொள்ள உள்ளது. அணையின் பாதுகாப்பு, உறுதித்தன்மை மற்றும் மழைக்காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடைபெறவுள்ளது. மூவர் குழுவின் பிரதிநிதிகளான இரு மாநில அரசின் செயலர்கள் ஆய்வு நடத்துகின்றனர். முன்னதாக கடந்த வருடம் ஜூலை 7ஆம் தேதி முல்லைப் பெரியாறு அணையில் மேற்கொள்ளப்பட்டது.