கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி. இவர் கடந்த சில ஆண்டுகளாக கால் தொடை பகுதியில் வலி இருந்து வந்ததால் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த வாரம் கலியமூர்த்தி உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த பொழுது அவரை பரிசோதித்த அறுவை சிகிச்சை நிபுணர் ரஞ்சித் கலியமூர்த்திக்கு சிடி ஸ்கேன் எடுக்க பரிந்துரை செய்தார். அதன்படி அதன் அறிக்கையை பார்வையிட்ட மருத்துவ ரஞ்சித் கலியமூர்த்திக்கு கேன்சர் கட்டி இருப்பதை உறுதி செய்தார் இதைத் தொடர்ந்து கலியமூர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினரிடம் கலியமூர்த்திக்கு அறுவை சிகிச்சை செய்ய ஒப்புதல் பெற்றார்.
இதைத் தொடர்ந்து கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட கலியமூர்த்திக்கு இன்று அறுவை சிகிச்சை மருத்துவ நிபுணர் ரஞ்சித் தலைமையிலான மருத்துவ குழுவினர் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர் அப்பொழுது கலியமூர்த்தியின் வலது கால் தொடையில் சுமார் 3 கிலோ 700 கிராம் எடை கொண்ட கேன்சர் கட்டி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. இதன் மூலம் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் இதுவரை 27 கேன்சர் கட்டிகளை உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் மருத்துவ ரஞ்சித் அகற்றி சாதனை படைத்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் அதிக அளவில் கேன்சர் கட்டிகளை கண்டறிந்து அறுவை சிகிச்சைகள் மூலம் அகற்றி உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனை சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.