செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் நாளை(13.11.2021) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், சென்னை மாவட்டங்களில் நாளை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தின் பல பகுதிகளிலும் கனமழை தீவிரமடைந்து வருகிறது. மேலும், வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுமண்டலத்தால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மிக கனமழை பெய்தது. இதனால் இந்த மாவட்டங்களில் பல பகுதிகளிலும், குறிப்பாக குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்திருக்கிறது.
இதன்காரணமாக செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். ஆனால் திருவள்ளூர், சென்னை மாவட்டங்களில் நாளை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்திருக்கின்றனர்.