கல்பாக்கம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் நின்றிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததில், மூன்று பேர் கருகி உயிரிழந்தனர்.
கல்பாக்கம் அடுத்த மணமை கிராமத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் நின்றிருந்த கார் திடீரென எரிந்தது. அப்போது காருக்குள் சிக்கியிருந்த மூன்று பேர் மூச்சுத்திணறலால் உயிரிழந்துள்ளனர். இதைப் பார்த்த பொதுமக்கள் மூவரையும் மீட்க முயற்சித்தனர். ஆனால் கார் தொடர்ந்து எரிந்தது.
இதுகுறித்து தவலறிந்த திருக்கழுகுன்றம் தீயணைப்பு வீரர்கள், விரைந்து வந்து தீயை அணைத்தனர். மூன்று சடலங்களும் மீட்கப்பட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சதுரங்கப்பட்டினம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்ததில், உயிரிழந்த மூவரும் சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. பெயர் விவரங்கள் குறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.