தமிழ்நாடு

7 மாதங்களாக பன்றி திருடி வந்த 3 பேர் கைது

7 மாதங்களாக பன்றி திருடி வந்த 3 பேர் கைது

webteam

அரியலூர் அருகே பன்றி திருடிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அரியலூா் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகில் உள்ள சூரியமணல் கிராமத்தை சேர்ந்தவர் இளையராஜா. இவர் அடிக்கடி தனது பன்றிகள் திருடு போவதாகவும் குறிப்பாக கடந்த 7 மாதங்களில் 30 பன்றிகள் காணாமல் போனதாகவும் ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இதனடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு தலைமையிலான போலீசார் மினி லாரி ஒன்றில் 3 பேர் சேர்ந்து பன்றியை வாகனத்தில் ஏற்றிக் கொண்டிருந்தனர்.

அதைக் கண்ட போலீசார் அவர்களை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதில் சந்தேகமடைந்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் மூவரும் பன்றி திருடிச் செல்வது தெரியவந்தது.

இதையடுத்து திருவாரூர் மாவட்டம் என்கண் கிராமத்தை சேர்ந்த ராஜா, கும்பகோணத்தை சேர்ந்த தர்மா, மணிகண்டன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.