புதுக்கோட்டையில் போலியான பணியாணை மூலம் அரசு மருத்துவமனையில் பணியில் சேர முயன்றவரையும் அதற்கு உதவியாக இருந்தவர்களையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கரம்பக்குடியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வரை சந்தித்து, அங்கு மருந்தாளுநராக பணியில் சேர வந்ததாக தெரிவித்துள்ளார்.
பணியாணையில் தன்னுடைய கையெழுத்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த முதல்வர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட கார்த்திகேயன், தனது நண்பர் பிரபாகரன் மூலம், விக்னேஷ் என்பவரிடம் இரண்டு லட்சம் ரூபாய் கொடுத்து பணியாணையை பெற்றுக் கொண்டதாக தெரிவித்தார்.
இதனை அடுத்து பிரபாகரன் மற்றும் விக்னேஷ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இதில் விக்னேஷ் என்பவர் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் என்று கூறப்படுகிறது.