தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று 3,713 பேருக்கு கொரோனா பாதிப்பு 

தமிழகத்தில் இன்று 3,713 பேருக்கு கொரோனா பாதிப்பு 

webteam
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,713 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்றும் ஒரே நாளில் 3,713 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 78,335  ஆக உயர்ந்துள்ளது. 
மேலும், தமிழகத்தில் இன்று மட்டும் 2,737 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் ஒட்டு மொத்தமாகத் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 44,094 ஆக உயர்ந்துள்ளது. 
சென்னையைப் பொறுத்தவரை இன்று ஒரே நாளில் மட்டும் 1,939 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் சென்னையில் மட்டும் நோயாளிகளின் எண்ணிக்கை 51,699 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்புக்கு 68 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்தம் 1,025 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.