தமிழ்நாடு

கூட்டுறவு சங்கங்களின் 2ஆம் கட்ட தேர்தல் தேதி அறிவிப்பு

கூட்டுறவு சங்கங்களின் 2ஆம் கட்ட தேர்தல் தேதி அறிவிப்பு

Rasus

தமிழ்நாட்டிலுள்ள கூட்டுறவுச் சங்கங்களின் 2-ஆம் கட்டத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

197 சங்கங்களின், 2 ஆயிரத்து 448 நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் அக்டோபர் 11-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதற்காக, அக்டோபர் 6-ஆம் தேதி மனுத்தாக்கலும், அக்டோபர் 8-ஆம் தேதி மனுக்கள் பரிசீலனையும், 9-ஆம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்படும். அதனையடுத்து அக்டோபர் 11 ஆம் தேதி தேர்தலும், வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவு 12-ஆம் தேதியும் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நிர்வாகக்குழு உறுப்பினர்களின் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட பின்னர் அக்டோபர் 16-ஆம் தேதி கூட்டுறவு சங்கத்தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.