தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 266 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா வைரஸ் தொடர்பான அறிவிப்புகளை சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்று வெளியிடப்பட்டுள்ள தகவலின் படி தமிழகத்தில் 266 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3023 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று மட்டும் 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன்மூலம் சென்னையில் மட்டும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1458 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 1379 ஆகவும், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 30 ஆகவும் உள்ளது.