தேர்தலை முன்னிட்டு, சென்னையில் இன்றும் நாளையும் கூடுதலாக 230 இணைப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
வெளியூர் பேருந்துகள் இயக்கப்படும் கோயம்பேடு, தாம்பரம், பூந்தமல்லி, மாதவரம், கே.கே.நகர் ஆகிய பேருந்து நிலையங்களுக்கு மக்கள் எளிதாக பயணிக்கும் வகையில் இணைப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்வதற்கு கூடுதலாக 3ஆயிரம் பேருந்துகள் 5 இடங்களில் இருந்து இயக்கப்படுவதாக ஏற்கனவே தமிழக அரசு அறிவித்திருந்தது.