தமிழ்நாடு

25 ஆண்டுகளுக்குப்பின் சந்திப்பு : நெகிழ்ந்த முன்னாள் மாணவர்கள்

25 ஆண்டுகளுக்குப்பின் சந்திப்பு : நெகிழ்ந்த முன்னாள் மாணவர்கள்

webteam

காஞ்சிபுரத்தில் அரசுப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் 25 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்து மகிழ்ந்தனர். 

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள அச்சிறுப்பாக்கத்தில் மார்வார் அரசினர் மேல்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 25 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1993 மற்றும் 94ஆம் ஆண்டில் 67 மாணவ, மாணவிகள் படித்தனர். இவர்களில் 65 பேர் இன்று தங்கள் குடும்பங்களுடன் மீண்டும் சந்தித்து மகிழ்ந்தனர். நீண்ட வருடங்களுக்குப் பிறகு அவர்கள் சந்தித்த தருணங்கள், அவர்களுக்குள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

அத்துடன் தங்களது ஆசிரியர்களையும் அழைத்து அவர்கள் கெளரவப்படுத்தினர். பிறகு தாங்கள் படித்த பள்ளிக்கு ரூ.3 லட்சம் மதிப்பில் கலையரங்கம், ரூ.1.5 லட்சம் மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு மற்றும் ரூ.50 ஆயிரம் மதிப்பில் பழைய கட்டடத்தை புதுப்பித்தல் என ரூ.5 லட்சம் மதிப்பிலான உதவிகளை செய்தனர். இவர்களில் சிலர் தற்போது காவல் துறை, நீதித்துறை, மேலாளர், பொறியியல் மற்றும் வெளிநாடுகளில் பணிபுரிந்து வருகின்றனர்.