தமிழ்நாடு

பொங்கல் கொண்டாட்டம் - சென்னை கடற்கரையிலிருந்து 25.8 மெட்ரிக் டன் குப்பைகள்‌ அகற்றம்

பொங்கல் கொண்டாட்டம் - சென்னை கடற்கரையிலிருந்து 25.8 மெட்ரிக் டன் குப்பைகள்‌ அகற்றம்

webteam

காணும் பொங்கல் கொண்டாட்டத்தின்போது சென்னை மெரினா உள்‌ளிட்ட கடற்கரையில்‌ இருந்து 25.8 மெட்ரிக் டன் குப்பைகள்‌ அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி‌ தெரிவித்துள்ளது.‌

காணும் பொங்கலையொட்டி ஏராளமான மக்கள் கடற்கரையில் கூடுவது வழக்கம். அதன்படி இந்த வருடமும் மெரினா மற்றும் எலியட்ஸ் கடற்கரையில் பொதுமக்கள் அதிகளவில் கூடினர். இந்தப் பொங்கல் கொண்டாட்டத்தின் போது சென்னை மெரினா உள்‌ளிட்ட கடற்கரையில்‌ இருந்து 25.8 மெட்ரிக் டன் குப்பைகள்‌ அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி‌ தெரிவித்துள்ளது.‌

மெரினா கடற்கரையில் 15.8 மெட்ரிக் டன் குப்பைகளும் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் 10 மெட்ரிக் டன் குப்பைகளும் அகற்றப்பட்டுள்ளன. குப்பைகளை அகற்றும் பணியில் ‌160க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டனர். கடந்த ஆண்டு மெரினா கடற்கரையில் 27 டன் அளவிலும், பெசன்ட் நகர் கடற்கரையில் 15 டன் அளவிலும் குப்பைகள் அகற்றப்பட்ட நிலையில் இந்த ஆண்டு 25.8 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன.

நெகிழிப் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் காணும் பொங்கல் கொண்டாட்டத்தின் போது கடற்கரைகளில் நெகிழிக் குப்பைகள் குறைந்திருந்ததாக கூறப்படுகிறது.