தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 231 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கடந்த சில நாட்களாக நாள் தோறும் நூற்றுக்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக சென்னையில்தான் அதிகபட்ச பாதிப்பு இருந்து வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 757 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் ஒரே நாளில் 174 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1256 ஆக அதிகரித்துள்ளது. நேற்று 176 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.