கோவையில் 230 கிலோ கஞ்சா கடத்திய இருவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
கோவை சின்னியம்பாளையம் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்ட காவல்துறையினர் தேனியில் இருந்து வந்த ஜீப்பை சோதனை
செய்தனர். அப்போது ஜீப்பில் தார்ப்பாயால் மறைத்து எடுத்து வரப்பட்ட 230 கிலோ எடைக்கொண்ட கஞ்சா மூட்டைகளை
காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், கஞ்சா கடத்தலுக்காக பயன்படுத்திய ஜீப்பையும் பறிமுதல் செய்தனர்.
பின்னர் கஞ்சா கடத்தி வந்த தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை சேர்ந்த முருகன், வனராஜ் ஆகிய இருவரை கைது செய்த பீளமேடு
காவல்துறையினர், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிடிக்கப்பட்ட கஞ்சா கோவை, திருப்பூர் ஆகிய
மாவட்டங்களுக்கு விற்பனை செய்ய எடுத்து செல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதில் வேறு யாருக்கேனும்
தொடர்பு உள்ளதா என்பது குறித்து தற்போது விசாரித்து வருகின்றனர்.