தமிழ்நாடு

ஆர்.கே.நகரில் 22 காவல் அதிகாரிகள் அதிரடியாக மாற்றம்

ஆர்.கே.நகரில் 22 காவல் அதிகாரிகள் அதிரடியாக மாற்றம்

Rasus

சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் 4 ஐ.பி.எஸ். அதிகாரிகள் உட்பட 22 காவல் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, வடசென்னை சட்டம் - ஒழுங்கு கூடுதல் காவல் ஆணையராக இருந்த எம்.சி.சாரங்கன் ஐ.பி.எஸ்-க்கு பதிலாக ஜெயராம் ஐ.பி.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதே போல், வடசென்னை இணை ஆணையராக பாஸ்கரன் ஐ.பி.எஸ்சும், வண்ணாரப்பேட்டை துணை ஆணையராக ஷாசாங்சாயும் நியமிக்கப்பட்டுள்ளனர். புளியந்தோப்பு துணை ஆணையராக ராமர், வண்ணாரப்பேட்டை உதவி ஆணையராக அர்னால்டு ஈஸ்டர் மற்றும் எம்.கே.பி.நகர் உதவி ஆணையராக அன்பழகன் நியமிக்கப்பட்டுள்ளனர்.