தமிழ்நாடு

உக்ரைனில் இருந்து மேலும் 21 மாணவர்கள் தமிழகம் திரும்பினர்

கலிலுல்லா

உக்ரைனில் இருந்து மேலும் 21 தமிழக மாணவர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.

உக்ரைனில் இருந்து 250 இந்தியர்களுடன் புறப்பட்ட விமானம் நேற்று மாலை டெல்லிக்கு வந்தடைந்தது. அதில், 21பேர் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர், மாணவிகள் ஆவர். சென்னை, கோவை, திருப்பூர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, கடலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 21மாணவர்கள் டெல்லியில் இருந்து விமானம் மூலம் அதிகாலை 1.30 மணியளவில் சென்னை வந்தடைந்தனர்.

விமான நிலையம் வந்திறங்கிய மாணவர்கள் முக்கிய நகரங்களில் ஆபத்தான நிலையில் இருக்கும் பிற மாணவர்களை மீட்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதுவரை 43 தமிழக மாணவர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.