2020ஆம் ஆண்டின் முதல் அமைச்சரவைக் கூட்டம் வரும் ஜனவரி 20ஆம் தேதி நடைபெறவுள்ளது.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் 20ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டின் முதல் அமைச்சரவைக் கூட்டம் இது. இந்தக் கூட்டத்தில் தமிழக பட்ஜெட் குறித்து ஆலோசிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்படவுள்ளதாக தெரிகிறது.
மாலை 4.30 மணியளவில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், அனைத்து அமைச்சர்களும் பங்கேற்பார்கள் எனத் தெரிகிறது. மேலும், அமைச்சர்கள் தங்கள் துறைகளின் கோரிக்கைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கவுள்ளனர்.