Electricity meter  web
தமிழ்நாடு

அமலுக்கு வரும் 200 யூனிட் இலவச மின்சார திட்டம்.. எப்போது.?

500 யூனிட் மீறி மின்சாரம் பயன்படுத்துவோருக்கு பழைய திட்டம் தொடர்ந்து 100 யூனிட் வரை மட்டுமே இலவச பலன் வழங்கப்படும்.

PT WEB

2026 சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், தவெக தலைவர் விஜய் தலைமையிலான தமிழக அரசு, 2 மாதங்களுக்கு ஒருமுறை 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை மே 10 முதல் அமல்படுத்துகிறது. 500 யூனிட் மீறினால், பழைய திட்டப்படி 100 யூனிட் மட்டுமே இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2026 சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியில், 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என தவெக தலைவர் விஜய் அறிவித்திருந்தார்.

அதன்பின்னர், முதல்வராக பதவியேற்ற உடன், முதல் கையெழுத்தாக தமிழ்நாடு முழுவதும் 2 மாதங்களுக்கு 500 யூனிட்வரை மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தில் கையெழுத்திட்டார்.

Vijay

இந்த 200 யூனிட் இலவச மின்சார திட்டம் மே 10-ம் தேதியில் இருந்து கணக்கிடப்படும். 500 யூனிட்களுக்கு மேல் பயன்படுத்தினால் 100 யூனிட் இலவசம் என்ற பழைய திட்டமே தொடரும் என்று தமிழக அரசு அறிவித்தது

இதையடுத்து மின்சார கணக்கீட்டு மென்பொருளில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக அனைத்து மேற்பார்வை பொறியாளர்களுக்கும் மின் வாரியம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

மின் கட்டணம்

2 மாதங்களுக்கு ஒருமுறை 500 யூனிட்கள் வரை மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோருக்கு மே 10 முதல் 200 யூனிட்கள் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும். 500 யூனிட்களுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோர், 100 யூனிட்கள் வரையிலான இலவச மின்சாரப்பலனைப் பெறுவார்கள்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.