தமிழ்நாடு

2 ஆண்டுகளில் 200 போலி பஸ்பாஸ்: சென்னையில் 5 பேர் கைது

webteam

2 ஆண்டுகளில் சுமார் ‌200 போலி பஸ்பாஸ்களைத் தயாரித்து விற்று வந்த சென்னையைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் போலி பஸ்பாஸ் தயாரித்து விற்று வந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக, மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. கைது செய்யப்பட்ட ஐந்து பேரில், கிருஷ்ணகுமார், ஜெகதீஷ், சுரேஷ், பிரகாஷ் ஆகிய நான்கு பேரும் சென்னை மா‌நகர போக்குவரத்து பணிமனை ஊழியர்கள் என்றும் மற்றொருவரான ஆந்திராவைச் சேர்ந்த நரேஷ் பாபு மின்‌வாரிய ஒப்பந்த ஊழியர் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த 2 ஆண்டுகளாக சுமார் ‌200 போலி பஸ் பாஸ்களைத் தயாரித்து விற்று வந்ததை அவர்கள் ஐவரும் ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட 5 பேரையும் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அவர்களை 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.