மதுரையில் அமையவிருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அரசு கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் கூடுதலாக 20 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக கடந்த ஜனவரி மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 2015-16 மத்திய பட்ஜெட்டில் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஆயிரத்து 264 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
இந்த மருத்துவமனைக்காக ஏற்கனவே 199 புள்ளி 98 ஏக்கர் நிலம் தமிழக வருவாய்த் துறையினரால் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் கூடுதலாக 20 ஏக்கர் நிலம் தேவை என கட்டுமானத் துறையினர் வேண்டுகோள் விடுத்ததால் 20 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு வழங்கியுள்ளது.