வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக தமிழக அமைச்சர்கள் குழுவுடன் பாமக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.
பசுமை வழிச்சாலையில் உள்ள மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி இல்லத்தில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, சி.வி சண்முகம் மற்றும் பாமக சார்பில் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி, வழக்கறிஞர் பாலு உள்ளிட்டோர் இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளனர்.
இந்தப் பேச்சுவார்த்தையில் வன்னியர்களுக்கு 20 சதவீத உள் ஒதுக்கீடு குறித்த பேச்சுவார்த்தை மட்டுமல்லாமல் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை இருக்கும் எனத் தெரிகிறது. பிப்ரவரி 14-ஆம் தேதி பிரதமர் தமிழகம் வருவதால், அதிமுக கூட்டணியில் பாமகவை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
முன்னதாக தைலாபுரத்தில் உள்ள தோட்ட இல்லத்தில் அமைச்சர்கள், பாமக உடன் இது குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது