தமிழ்நாடு

தலைமறைவான சாமியார் - 2 ஆண்டுகளுக்கு பின் போலீசார் தேடுதல் பணி

தலைமறைவான சாமியார் - 2 ஆண்டுகளுக்கு பின் போலீசார் தேடுதல் பணி

webteam

பாலியல் புகாரை அடுத்து தலைமறைவான சாமியாரை, இரண்டு வருடங்களுக்கு பிறகு போலீசார் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

14 வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வந்த  பாலியல் வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளியான சென்னையைச் சேர்ந்த சாமியார் வெங்கட சரவணனை போலீசார் கைது செய்துள்ளனர். சாமியாரான வெங்கட சரவணன் மீது பாலியல் மற்றும் ஆட்கடத்தல் வழக்கு உள்ளது. சென்னை ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின் மனைவி மகளை கடத்தி வைத்து 2ஆண்டுகளுக்கும் மேலாக பாலியல் சுரண்டலுக்கு  அவர்களை பயன்படுத்தியதாக சாமியார் வெங்கட சரவணன் மீது புகார் அளிக்கப்பட்டது. மேலும் சாமியார் நடத்திவரும் ஆசிரமத்துக்கு சுரேஷை மிரட்டி ரூ.15 லட்சம் பெற்றதாகவும், சென்னை டிடிகே சாலையில் உள்ள சுரேஷின் வீட்டில் தரைத்தளத்தை சாமியாரே பிடிங்கி கொண்டதாகவும் அவர் மீது அடுக்கடுக்கான புகார்கள் கொடுக்கப்பட்டது.

இதனையடுத்து 2004ம் ஆண்டு சாமியார் வெங்கட சரவணன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு பதியப்பட்டது. புகாரின் அடிப்படையில் சாமியார் வெங்கட சரவணன் உள்ளிட்ட 6 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். வழக்கு தொடர்பாக குறுக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில்  2016ம் ஆண்டு சாமியார் வெங்கட சரவணன் மாயமானார்.  தப்பிச்சென்ற வெங்கட சரவணனை போலீசார் பல இடங்களிலும் தேடிய நிலையில் வாரணாசியில் இருப்பதாக தகவல் கிடைத்தது. உடனடியாக வாரணாசி சென்ற போலீசார் வெங்கட சரவணனை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கைது குறித்து பேசிய காவல்துறையினர், ''தப்பிச்சென்ற பிறகு வெங்கட சரவணன் வட இந்தியாவில் தங்கி ஆசிரமம் நடத்தி வந்துள்ளார். நேபாள் உள்ளிட்ட பல இடங்களில் தன்னுடைய இருப்பிடத்தை மாற்றி அவர் வசித்துள்ளார். போலீசாரிடம் இருந்து தப்பிப்பதற்காகவே அவர் தனது இருப்பிடம், தொலைபேசி எண்ணை அடிக்கடி மாற்றி வருகிறார்'' என்று தெரிவித்தனர்.