திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த நம்பேடு கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினர் ராஜேஷ்-ஐஸ்வர்யா. இவர்களுக்கு பிரேம் குமார், லோகேஷ் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளன.
ராஜேஷ் கொத்தனாராக சென்னையில் பணியாற்றி வரும் நிலையில், ஐஸ்வர்யா விவசாயம் செய்து வாழ்ந்து வருகின்றனர். இந்த சூழலில் இன்று ஐஸ்வர்யா தனது தாய் வீடான தில்லனூரில் தாய் தந்தையை பார்ப்பதற்காக வந்துள்ளார்.
இந்த நிலையில் இரண்டு மகன்களும் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது, வீட்டிற்கு வெளியே வைக்கப்பட்டிருந்த தண்ணீர் தொட்டியில் இளைய மகன் லோகேஷ் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்துள்ளார்.
லோகேஷன் அலறும் சத்தம் கேட்க ஓடிவந்த தாயார் ஐஸ்வர்யா லோகேஷயை மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக பெரணமல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டுசென்றார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்பு மேல் சிகிச்சைக்காக ஆரணியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது செல்லும் வழியிலேயே லோகேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.
தற்போது இச்சம்பவம் குறித்து பெரணமல்லூர் காவல் நிலைய போலீசார் லோகேஷ் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.