விழுப்புரம் அருகே போலீசை பற்றி செல்போனில் அவதூறாக பேசியதாக விஜய் ரசிகர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ஆனந்தபுரம், உமையாள்புரம் பகுதிகளை சேர்ந்தவர்கள் வீரன் மற்றும் சரத்குமார். விஜய் ரசிகர்களான இவர்கள் இரண்டு பேரும் விஜய்க்கு மன்றம் வைப்பது சம்பந்தமாக தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது போலீசிடம் அனுமதி வாங்க வேண்டும் என்று ஒருவர் சொல்ல மற்றொருவர் எதற்கு போலீஸ் அனுமதியெல்லாம் என்று போலீசை பற்றி அவதூறாக பேசியுள்ளார்.
மேலும் அவர்கள் பேசியதை செல்போனில் பதிவு செய்து வாட்ஸ்அப்பிலும் பரவ விட்டதாக தெரிகிறது. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கியம் பாஸ்கர் ராஜ் என்பவர், அனந்தபுரம் போலீசாரிடம் புகார் அளித்தார். அதன் பேரில் வீரன் மற்றும் சரத்குமார் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.