தமிழ்நாடு

திருச்சி: போட்டிபோட்டு சென்றதில் பற்றி எரிந்த 2 லாரிகள்... 2 பேர் உடல் கருகி உயிரிழப்பு

webteam

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நெடுஞ்சாலையில் நள்ளிரவில் 2 லாரிகள் உரசிக் கொண்டதில் இரண்டு லாரிகளும் தீப்பற்றி எரிந்ததில் 2 பேர் உயிரிழந்தனர்.

அரியலூரிலிருந்து வள்ளியூருக்கு சிமெண்ட் ஏற்றிச் சென்ற லாரி ஒன்று திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்றுள்ளது. அதே சாலையில் திருச்சியிலிருந்து தூத்துக்குடிக்கு சென்று கொண்டிருந்த லாரி ஒன்றும் போட்டி போட்டுக் கொண்டு இரண்டு லாரிகளும் வேகமாகச் சென்றுள்ளன. அப்போது அதிவேகமாகச் சென்ற நிலையில், தொண்டைமாங்கினம் என்ற இடத்தில் இரண்டு லாரிகளும் ஒன்றோடு ஒன்று உரசிக் கொண்டது. அப்போது கவிழ்ந்த இரு லாரிகளும் தீப்பற்றி எரிந்துள்ளது.

தகவலறிந்து சென்ற துவரங்குறிச்சி தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரத்திற்கும் மேல் போராடி நெருப்பை கட்டுப்படுத்தினர். இதனிடையே, திருச்சியில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்ற லாரியில் இருந்த லாரி ஓட்டுநரும் உதவியாளரும் உடல் கருகி உயிரிழந்தனர். விபத்து ஏற்பட்டது குறித்தும் உயிரிழந்தவர்களின் விபரங்கள் குறித்தும் துவரங்குறிச்சி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் நேரிட்ட இந்த விபத்தின் காரணமாக, திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு போக்குவரத்து முடங்கியது.