தமிழ்நாடு

தமிழகத்தில் திருடர்கள், கேரளாவில் தொழிலதிபர்கள்: கொள்ளை கும்பல் கைது

தமிழகத்தில் திருடர்கள், கேரளாவில் தொழிலதிபர்கள்: கொள்ளை கும்பல் கைது

webteam

காரில் சென்று வீடுகளில் கொள்ளையடிக்கும் கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். கொள்ளையடித்த பணத்தில் கேரளாவில் தொழிலதிபர்களாக வலம் வந்தது போலீஸ் விசாரணையில் அம்பலமானது.

பள்ளிக்கரணையைச் சேர்ந்த ஜீவதரன் என்ற பல் டாக்டரின் வீட்டில் கடந்த ஜூன் மாதம் நகைகள், பணம் திருட்டு போனது. சிசிடிவி காட்சியை போலீசார் ஆராய்ந்தபோது, சம்பவ இடத்தில் நின்றிருந்த காரின் நம்பரை வைத்து மதுரையைச் சேர்ந்த பாண்டி, நெல்லையைச் சேர்ந்த ராஜா ஆகியோரைப் பிடித்தனர். அவர்கள் புழல் பகுதியின் சக்திநகரில் தங்கி, பல்வேறு இடங்களில் திருடியது விசாரணையில் தெரிய வந்தது.

மேலும், திருடிய நகைகளை விற்று கேரளாவில் இரும்புக் கடை நடத்தியதும், அங்கு தொழிலதிபர்கள் போல சுற்றி வந்ததும் தெரிய வந்தது. இடையிடையே தமிழகம் வந்து திருட்டில் ஈடுபட்டு வந்ததும் காவல்துறை விசாரணையில் தெரியவந்தது.