தியாகிகள் தினம் இன்று அனுசரிக்கப்படுவதை ஒட்டி சென்னையில் காலை 11 மணிக்கு மவுன அஞ்சலி செலுத்த ஏதுவாக 2 நிமிடம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இந்திய சுதந்திர போராட்டத்தில் கலந்துகொண்டு உயிர்த் தியாகம் செய்த சுதந்திரப் போராட்ட வீரர்களின் நினைவாக ஒவ்வொரு வருடமும் ஜனவரி 30ம் தேதி தியாகிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. உயிர்த் தியாகம் செய்த சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக காலை 11:00 மணிமுதல் 11:02 வரை இரண்டு நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்தச் சமயத்தில் சென்னை பெருநகரில் போக்குவரத்து இரண்டு நிமிடங்கள் நிறுத்தப்படும் என்றும் இதற்கு வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு நல்குமாறும் காவல்துறை தரப்பில் ஏற்கனவே கேட்டுக்கொள்ளப்பட்டது. இதனையடுத்து இன்று காலை 11 மணி முதல் 11.02 வரை 2 நிமிடங்கள் அஞ்சலி செலுத்த ஏதுவாக வாகனங்கள் நிறுத்தப்பட்டது. இதேபோல் தமிழகம் முழுவதும் 2 நிமிடங்கள் வாகனங்கள் நிறுத்தப்பட்டு தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.