தமிழ்நாடு

கோயில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு - சிசிடிவி வீடியோ

கோயில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு - சிசிடிவி வீடியோ

webteam

ஈரோட்டில் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ஈரோடு முத்தம் பாளையத்தில் தம்பி கலை அய்யன் என்ற கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்குள் நேற்று நள்ளிரவு சுற்று சுவர் ஏறி குதித்து இரண்டு மர்ம நபர்கள் உள்ளே நுழைந்தனர். உள்ளே நுழைந்த இருவரும் முகத்தில் துணியை வைத்து மறைத்து இருந்தனர். பின்னர் கோயில் வளாகத்திலுள்ள உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்தனர். 

இந்நிலையில் கோவிலுக்கு வந்த பொதுமக்கள் உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது குறித்து தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் கோவிலில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் இரண்டு மர்ம நபர்கள் தங்கள் முகத்தில் துணியை கட்டிக் கொண்டு கோயில் சுற்று சுவர் ஏறி குதித்து உண்டியலை உடைக்கும் காட்சி பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.