மதுரை அருகே கல்குவாரியில் மூழ்கி 2 சிறுமிகள் பரிதாபமாக உயிரிழ்ந்தனர்.
மதுரை மாவட்டம் ஒத்தக்கடை யானைமலையை அடுத்த கல்குவாரியில் குளிக்கச் சென்ற இரு சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தீபாவளியை முன்னிட்டு மலைச்சாமி என்பவர் தனது மனைவி மற்றும் இரு மகள்களுடன் கல்குவாரியில் குளிக்கச் சென்றபோது இந்த சோக சம்பவம் நிகழந்துள்ளது. பெற்றோர்கள் கவனிக்காத சமயத்தில் சிறுமிகள் இருவரும் குவாரியில் குளிக்க முயன்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிந்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.