உயிரிழந்த பழனி, புராசாமி
உயிரிழந்த பழனி, புராசாமி புதிய தலைமுறை
தமிழ்நாடு

மயிலாடுதுறையில் மது அருந்திய இருவர் உயிரிழந்த விவகாரம்: முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்!

PT WEB

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா தத்தங்குடியைச் சேர்ந்தவர் பழனி குருநாதன் (55). இவர் மங்கைநல்லூர் கடைவீதியில் தச்சுப் பட்டறை வைத்து நடத்தி வந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த புராசாமி (65) என்பவர் அவரது தச்சுப் பட்டறையில் வேலை பார்த்து வந்துள்ளார். இருவரும் நண்பர்கள்போல் பழகிவந்த நிலையில், இரவு நேரங்களில் மது குடிப்பதை வழக்கமாக வைத்திருந்துள்ளனர். இந்த நிலையில், நேற்று இரண்டு பேரும் வாந்தி மயக்கத்துடன் பட்டறையில் கிடந்துள்ளனர். இதை அறிந்த உறவினர்கள் அவர்களை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

சயனைடு கலந்த மதுவால் உயிரிழந்தவர்கள்

ஆனால், அவர்கள் வழியிலேயே உயிரிழிந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இறந்து கிடந்த தச்சுப் பட்டறையில், அரசு டாஸ்மாக் கடையின் திறக்கப்படாத ஒரு மானிட்டர் குவாட்டர் பாட்டிலும், காலியான மற்றொரு பாட்டிலும் கிடந்துள்ளது. அந்த மதுபாட்டில்களை கைப்பற்றிய பெரம்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் உயிரிழந்த இரண்டு பேரின் குடும்பத்தினரும், இருவருக்கும் எந்த விதமான கடன் பிரச்னைகளும் இல்லை என்றும் உடலில் எந்த நோய்களும் இல்லை என்றும், மது அருந்தியதன் விளைவாக இருவரும் உயிரிழந்ததாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.

alcohol

இதையடுத்து போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில், இவர்கள் குடித்த மதுவில் சயனைடு கலந்திருப்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பான முழுவிவரங்களை, கீழ்காணும் வீடியோவில் காண்க.