தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பாகவே தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உணரப்படுகிறது. இந்நிலையில், தமிழகத்தில் இன்று அதிக பட்சமாக திருத்தணி மற்றும் வேலூரில் 109 டிகிரி பாரன் ஹீட் வெப்பம் பதிவானது. இதே போல், கரூரில் 108 டிகிரி பாரன் ஹீட் பதிவாகியுள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் 105 டிகிரி பாரன் ஹீட்டும் நுங்கம்பாக்கத்தில் 103 டிகிரி பாரன் ஹீட்டும் வெப்பம் பதிவாகியுள்ளது. வெயிலின் தாக்கம் அடுத்த இரு தினங்களுக்கு அதிகளவில் இருக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.