தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே இந்துசமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான 2 கோடி ரூபாய் மதிப்பிலான இடம் மீட்கப்பட்டது.
கண்டியூரில் பிரம்ம சிரகண்டீஸ்வரர் ஆலயத்திற்கு சொந்தமான நிலம் உள்ளது. 3.10 ஏக்கருடைய இந்த நிலத்திற்கு குத்தகைதாரர் நீண்டகாலமாக குத்தகை செலுத்தாமல் இருந்ததால் கோயிலின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், குத்தகைதாரரிடம் இருந்து நிலத்தை மீட்க உத்தரவிட்டது. இதனையடுத்து, வருவாய்த்துறை அதிகாரிகள் 2 கோடி ரூபாய் மதிப்பிலான இடத்தை மீட்டு கோயில் வசம் ஒப்படைத்தனர்.