சென்னை பள்ளிக்கரணை அருகே குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது 5 மாத பெண் குழந்தை, இரண்டரை வயது ஆண் குழந்தையுடன் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை பள்ளிக்கரணை அருகே உள்ள நூக்கப்பாளையத்திலுள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 4 ஆண்டுகளாக குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஜிகான்ஷா என்பவர் மனைவி ஜானாஷா மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக கணவன் - மனைவிக்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது. அதனால், ஜானாஷா 2 குழந்தைகளையும் கொன்றுவிட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில், மூவரின் உடலையும் காவல்துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கு யாரும் காரணமில்லை என்றும், குழந்தைகளை பராமரிக்க ஆள் இல்லாததால் அவர்களையும் அழைத்து செல்வதாக ஜானாஷா கடிதம் எழுதி வைத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.