சென்னை மெரினா கடல்பகுதி அலையில் சிக்கித்தவித்த இரண்டு இளைஞர்களை, ரோந்து காவலர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஐதராபாத்தை சேர்ந்த ரமணா, நரேந்திரா ஆகிய இருவரும் சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை கடல்பகுதியில் குளிக்கும் போது, கடல் அலை இழுத்துச்சென்றது. இதனையடுத்து விரைந்து செயல்பட்ட ரோந்து காவலர்கள் ரமணன் மற்றும் வினோத்குமார் இருவரையும் மீட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இளைஞர்களை மீட்ட காவலர்களுக்கு காவல் ஆணையர் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.