தமிழ்நாடு

கோவை: கொட்டகை அமைத்து கூட்டம் கூடி தொழுகையில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு

webteam

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் இந்தியாவும் நாளுக்கு நாள் அதிக பாதிப்புகளை சந்தித்து வருகிறது. கொரோனா
பரவுவதை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 21 நாட்கள் ஊரடங்கை பிரதமர் மோடி கடந்த மாதம் அறிவித்தார். வரும் 14ம்
தேதியோடு 21 நாட்கள் ஊரடங்கு முடியும் நிலையில் மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

பல மாநிலங்கள் ஊரடங்கை நீட்டிக்கக்கோரி வலியுறுத்துவதாக மத்திய அரசு தெரிவித்தது. அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே
பொதுமக்கள் வெளியே வர வேண்டுமென்றும், அப்படி வருபவர்களும் முறையான சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டுமென்றும்
அரசு கேட்டுக்கொண்டுள்ளது. தேவையின்றி வெளியில் நடமாடுபவர்கள் மீது சட்டரீதியிலான நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது.

இந்நிலையில் கோவை பெரியகடை வீதி அருகே அன்பு நகரில் இரு வேறு இடங்களில் அமைக்கப்பட்ட கொட்டகையில் தலா 30 பேர் கூடி தொழுகையில் ஈடுபட்டதாக இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அபுதாகிர், முகமது ரபிக் ஆகிய இருவர் மீது அரசு உத்தரவை மீறுதல், நோயை பரப்பும் வகையில் செயல்படுதல், தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939 ஆகிய 3 பிரிவுகளின் கீழ் பெரியகடைவீதி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.