தமிழ்நாடு

வீட்டின் முன்பு நிறுத்தப்பட்ட 20-க்கும் மேற்பட்ட கார் கண்ணாடிகள் உடைப்பு: 2 பேர் கைது

வீட்டின் முன்பு நிறுத்தப்பட்ட 20-க்கும் மேற்பட்ட கார் கண்ணாடிகள் உடைப்பு: 2 பேர் கைது

webteam

ராசிபுரத்தில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 20-க்கும் மேற்பட்ட கார் மற்றும் ஆட்டோக்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்ட வழக்கில் போலீசார் 2 இளைஞர்களை கைது செய்துள்ளனர். 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் கடந்த 8-ம் தேதி இரவு வீட்டிற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த 20-க்கும் மேற்பட்ட கார் மற்றும் ஆட்டோக்கள் கண்ணாடிகளை மர்ம நபர்கள் மதுபாட்டில்களால் உடைத்து கத்தியை காட்டி மிரட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் புகார் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

இந்நிலையில் ராசிபுரம் பகுதியை சேர்ந்த நல்லதம்பி (21), முகம்மதுநபீக்(18) உள்ளிட்ட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் மது போதையில் இவ்வாறு செய்ததாக ஒப்புக்கொண்டனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய சட்டக்கல்லூரி மாணவன் ராம்மோகனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கைதானவர்களிடம் இருந்து இருச்சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.