தமிழ்நாடு

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது 

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது 

webteam

கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.

கோவை சரவணம்பட்டி துடியலூர்  சாலையில் இயங்கி வரும் தனியார் கல்லூரி அருகே மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வதாக சரவணம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சரவணம்பட்டி  ஆய்வாளர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை நடத்தினர் .அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்ததால் அவர்களை தீவிர விசாரணைக்கு உட்படுத்தினர்.

இதில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ராமநாதன்(26),பெரியநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த அரூரன்(23) என்பதும் இருவரும் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த 1கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.