தமிழ்நாடு

சென்னையில் இருந்து 2 நாட்களில் 2.06 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்

சென்னையில் இருந்து 2 நாட்களில் 2.06 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்

Sinekadhara

முழு ஊரடங்கு எதிரொலியாக, சென்னையில் இருந்து கடந்த 2 நாட்களில் அரசு பேருந்துகள் மூலம் 2 லட்சம் பேர் வெளியூர்களுக்கு சென்றுள்ளனர்.

கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கான முழு ஊரடங்கை முன்னிட்டு மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழங்களின் சார்பாக 2 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

இந்த பேருந்துகள் மூலம் 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் சென்னையில் இருந்து 2,05,875 பேர் வெளியூர்களுக்குச் சென்றுள்ளனர். அதிகப்படியாக தென்மாவட்டங்கள் மற்றும் மதுரை மண்டலத்திற்கும், வடமாவட்டங்களுக்கும் அதிக அளவில் சென்றதாக தமிழக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.