தமிழ்நாடு

கோவையில் காய்ச்சல் பாதிப்பு: 187 பேர் மருத்துவமனையில் அனுமதி

கோவையில் காய்ச்சல் பாதிப்பு: 187 பேர் மருத்துவமனையில் அனுமதி

webteam

கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டெங்கு பாதிப்புடன் 17 பேர் உட்பட 187 பேர் காய்ச்சல் பாதிப்பால் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோவை அரசு மருத்துவ கல்லூரியின் டீன் அசோகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தட்டணுக்கள் ஐம்பதாயிரத்திற்கும் குறைவாக இருந்தால் அரசு மருத்துவமனைக்கு மாற்ற அரசு அறிவுறுத்தியுள்ளது. அதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்தம் அளிக்க தன்னார்வலர்கள் முன் வர வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் காய்ச்சல் காரணமாக மருத்துவமனைகளில் பலர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.