தமிழ்நாடு

கும்மிடிபூண்டி அருகே அம்மன் சிலைகள் உள்பட 18 சிலைகள் மீட்பு

Rasus

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டி அருகே ஏழு அம்மன் சிலைகள் உட்பட 18 பழங்காலத்து சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கும்மிடிபூண்டி அடுத்த எளாவூர் ஏழுகண் பாலத்தின் வழியே அந்த பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். அப்போது, பாலத்தின் ஒரு பகுதியில் கற்சிலைகள் இருந்ததை கண்ட மீனவர்கள் ஆரம்பாக்கம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து அங்கு விரைந்த கா‌வல்துறையினர் பாலத்தின் கீழ் பகுதியில் இருந்த 7 அம்மன் சிலைகள், விஷ்ணு சிலை, சிங்கத்தின் சிலை, 2 நாக சிலைகளை கண்டெடுத்தனர். மேலும், நந்தி சிலை, மயில் சிலை, 2 பலிபீடம், ஐயப்பன் சிலை, கருடன் சிலை என 18 கற்சிலைகளை மீட்டனர். பின்னர் அந்த சிலைகள் வருவாய்த்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும், சிலைகளை கடத்தும் முயற்சியில் ஈடுபட்ட நபர்கள், காவல்துறையினரின் வாகனச் சோதனைக்கு பயந்து அங்கு விட்டுச்சென்றனரா? அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா? ‌என்று பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் அந்‌த சிலைகள்‌ 14ஆம் நூற்றாண்டுகால சிலைகளாக இருக்கலாம் என்று தொல்லியல்துறையினர் தகவல் தெரிவிக்கின்றனர்.