வடிகால் வாய்க்காலில் விழுந்து 18 மாத குழந்தை உயிரிழப்பு web
தமிழ்நாடு

கடலூர்| 18 மாத குழந்தை வடிகால் வாய்க்காலில் தவறி விழுந்து உயிரிழப்பு!

கடலூரில் வடிகால் வாய்க்காலில் தவறிவிழுந்து 18 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..

PT WEB

கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அடுத்த பாளையங்கோட்டை கிராமத்தில் வசித்துவருபவர் பழனி. இவருடைய சாய் ரக்சன் என்ற 18 மாத ஆண் குழந்தை வீட்டின் அருகே உள்ள மழை நீர் வடிகால் வாய்க்காலில் தவறிவிழுந்து அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.

இதனை அடுத்து உறவினர்களும் கிராம மக்களும் குழந்தையை தேடியும் கிடைக்காத நிலையில், இது சம்பந்தமாக சோழதரம்  காவல்துறைக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.

2 வயது சிறுவன் உயிரிழப்பு

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், வாய்க்காலில் விழுந்த குழந்தையை தேடிய நிலையில், குழந்தை அடித்துச்செல்லப்பட்டு உயிரிழந்த நிலையில் புது ஏரியில் கிடைத்துள்ளது. இறந்த நிலையில் குழந்தையை தீயணைப்பு துறையினர் தேடிக்கண்டுபிடித்துள்ளனர். இச்சம்பவம் அங்கு பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..