தமிழ்நாடு

தமிழகத்தில் 18 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்

தமிழகத்தில் 18 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்

Rasus

18 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசின் கூடுதல் முதன்மைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி உத்தரவிட்டுள்ளார். இதில் 9 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் கணேசமூர்த்தி டி.ஜி.பி. அலுவலக ஐ.ஜி.-ஆக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். காத்திருப்போர் பட்டியலில் இருந்த டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் சென்னை மத்திய குற்றப்பிரிவு இணை ஆணையராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

தலைமை அலுவலக டி.ஐ.ஜி.-ஆக பணிபுரிந்த செந்தில்குமாரி ரயில்வே டி.ஐ.ஜி.-ஆக மாற்றப்பட்டுள்ளார். ஐ.பி.எஸ். அதிகாரிகள் அதிவீரபாண்டியன், சீனிவாசன், பாலாஜி சரவணன், பாலகிருஷ்ணன், சண்முகம், மீனா, ஸ்டாலின், ராஜா, ராதாகிருஷ்ணன் ஆகியோர் எஸ்.பி.க்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.