விழுப்புரம் அருகே நடமாடும் வாகனத்தில் விற்பனை செய்த கேக்கை வாங்கி சாப்பிட்ட 18 சிறுவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் அருகே பொய்கை அரசூரில், நடமாடும் வாகனத்தில் கேக் விற்பனை செய்யப்பட்டு உள்ளது. அப்போது அப்பகுதி பெற்றோர்கள் குழந்தைகளுக்கு கேக் வாங்கி கொடுத்துள்ளனர். இதையடுத்து கேக் வாங்கி சாப்பிட்ட 18 சிறுவர், சிறுமிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட குழந்தைகள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்ட குழந்தைகள் 2 வயது முதல் 16 வயதுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.