சேலத்தில் விபத்திற்குள்ளான கூரியர் பார்சல் லாரியில் இருந்து 170 செல்போன்களை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடந்த ஜனவரி 22ம் தேதி சென்னையில் இருந்து கோவைக்குச் சென்ற மினி கூரியர் பார்சல் லாரி, சேலம் அருகே குமரகிரி பகுதியில் விபத்திற்குள்ளானது. அப்போது, லாரியின் கதவை உடைத்து, 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள செல்போன் பார்சலை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதுதொடர்பாக, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த போலீசார், அம்மாப்பேட்டையை சேர்ந்த சுரேஷ், தங்கராஜ் ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் விற்ற நபர்களிடம் இருந்து செல்போன்களை பறிமுதல் செய்துள்ளனர்.