சென்யார் புயல், சுமத்ரா தீவு அருகே கரையை கடந்த நிலையில், இந்தோனேசியாவின் பல்வேறு பகுதிகளில் அதிகனமழை பெய்தது. மழை காரணமாக பல்வேறு இடங்களில் மண்சரிவு மற்றும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மழை தொடர்பான விபத்துகளில் சிக்கி இதுவரை 17 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 6 பேர் காணாமல் போயுள்ளதால், அவர்களை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
சிபொல்கா, தபனுலி, மண்டாய்லிங் நடால் உள்ளிட்டபகுதிகள் கடுமையான சேதத்தை எதிர்கொண்டுள்ளன. முக்கியசாலைகள், பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் போக்குவரத்து முடங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து மக்கள் மீட்கப்பட்டு வரும் நிலையில், மழை தொடர்வதால் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் சிக்கல்நிலவுகிறது.