தமிழ்நாடு

மதுபான‌க் கடைக்கு தீ வைப்பு: ரூ.17 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் நாசம்

மதுபான‌க் கடைக்கு தீ வைப்பு: ரூ.17 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் நாசம்

webteam

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே டாஸ்மாக் கடைக்கு தீ வைக்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே எளாவூரில் அடுத்தடுத்து 2 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றை மூட வலியுறுத்தி மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று அதிகாலை டாஸ்மாக் கடைக்கு அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுப்படுத்தினர். இதில் ரூ.17 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் நாசமாகின.